தலைசிறந்த நரம்பியல் மருத்துவன் என்று பெயர் எடுத்த அருள் குமரனிடம் ஒரே ஒரு குறை. கோபத்தை தவிர எதுவும் வெளிப்படையாக வராது. குடும்பத்தில் அனைவரிடமும் சண்டை தான்.
திடீரென்று ஒரு நாள் நண்பனுடன் ஊருக்கு சென்றவன் திரும்பி வந்த போது ஒருத்தியை திருமணம் செய்து அழைத்து வந்தான். அவளுக்கோ வாயிலிருந்து வார்த்தைகள் வருவதே அதிசயம்.
பழகி இரண்டு நாட்கள் தான் என்றாலும் அவனுடைய குடும்பத்திடம் அவளை காதலித்து திருமணம் செய்ததாக கூறினான். அனைவரிடமும் அவளுக்காக சண்டையிட்டான். அவளுடைய கனவுகளை கேட்டு அறிந்து கொண்டான். அவற்றை நிறைவேற்றவும் போராடினான். நாட்கள் நகர அவளுக்கு அவனிடத்தில் காதல் வந்துவிடுமோ???
நாயகன் – அருள் குமரன்
நாயகி – சௌந்தர்யா
கதையிலிருந்து…..
அன்றிரவு இருவரும் அவளுடைய கிராமத்திலிருந்து காரில் புறப்பட, நகரத்திலிருந்த அவர்களுடைய வீடு வந்து சேர இருவருக்கும் மறுநாள் காலை ஆகியிருந்தது. வீட்டின் உள்ளே சென்ற சௌந்தர்யா நேராக அவளுடைய அறை நோக்கி செல்ல பின்னால் வந்த அருள் குமரன், “எங்கே போற?” என்று கேட்டான்.
அவளோ, “என் ரூமுக்கு” என்று சொல்ல அவன், “இனி காலேஜ் இல்லாதப்போ என் கூட தான் இருக்கணும். உனக்கு இப்போ ஸ்டடி ஹாலிடேஸ் தானே?” என்று கேட்க அவள் ஆமாமென்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“என் ரூமுக்கு போ” என்று அவன் சொல்ல அவளும் தயக்கத்துடன் அவனுடைய அறைக்கு சென்றாள்.
கதவை திறந்து அவள் உள்ளே நுழைய அவனும் பின்னாலேயே வந்து அவளை அணைத்துக் கொண்டான். முகத்திலும் கழுத்திலும் மாறி மாறி முத்தங்களை தந்தவன் அவளுடைய இதழ்களையும் ஆக்கிரமிக்க அவளுக்கோ சுதாரிக்க ஒரு நொடி கூட கிடைக்கவில்லை.
ASIN : B0FJH14NNP
Language : Tamil
File size : 2.4 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 835 pages
Best Sellers Rank: #9 in Kindle Store (See Top 100 in Kindle Store) #1 in Medical Romance eBooks #1 in Romantic Comedy eBooks #1 in Medical Romance
Customer Reviews: 4.6 4.6 out of 5 stars 41 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });