நேசிப்பாயா: Nesipaaya (Tamil Edition)

1 min read

121 words

நேசிப்பாயா: Nesipaaya (Tamil Edition)
Spread the love

1 min read

121 words

நேசிப்பாயா: Nesipaaya (Tamil Edition)


Price: ₹199.00
(as of Aug 08, 2025 19:05:45 UTC – Details)


நாயகனின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட காயத்தில் தனக்குள்ளேயே இறுகி போய் வாழும் நாயகனின் வாழ்க்கையில் அவன் விருப்பமின்றி நுழைந்து அவனை விரும்பி கைபிடிக்க துடிக்கும் நாயகியின் காதலை எனது பாணியில் நகைச்சுவை கலைந்து உருவானதே இந்த “நேசிப்பாயா” ஆகும்.
கதையிலிருந்து ஒரு குட்டி டீசர்
“ஏய், நான் சொல்றதைக் கொஞ்சமாவது கேளுடி” என்றான் அஸ்வின்.
“மாட்டேன்! கேட்க மாட்டேன்! கேட்கவே மாட்டேன்!” என்று அவனிலிருந்து விடுபட்டு வெளியே வந்தவள், கண்கள் கலங்க, “எவ்ளோ அழுதேன் தெரியுமா? எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? எவ்ளோ நாள் தூங்காம இருந்தேன் தெரியுமா?” என்று அஸ்வினின் மார்பில் அடித்துச் சொன்னாள்.
அவள் கைகள் இரண்டையும் மேலே தூக்கிப் பிடித்தவன், அவளை அப்படியே சுவரோடு சாய்த்து, அவன் மூச்சுக்காற்று அவள் கன்னம் உரச, “நானும் தான்..” என்றான், அவள் காது மடல் உரச.
எத்தனை கோபங்கள், வருத்தங்கள் இருந்த போதிலும், அவன் மூச்சுக்காற்றின் ஸ்பரிசத்தில், அவள் தேகம் கூசி சிலிர்த்தது.
அதை உணர்ந்து கொண்டவனாக, நிமிர்ந்து அவள் விழி பார்த்தவன், என்ன என்பதாய் கள்ளச் சிரிப்புடன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அஞ்சலிக்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது.
உயர்த்திப் பிடித்திருந்தவனின் கைகளில் இருந்து தன் கையை விலக்கிக்கொள்ள அவள் முயற்சி செய்ய, மூச்சுக்காற்று படும் தூரத்தில் இருந்தவனின் தேகத்தில் உஷ்ணம் ஏறியது.
அவள் விழிகளைப் பார்த்துக்கொண்டே, ஒற்றைக் கையால் அவள் இரு கைகளையும் அடக்கிக் கொண்டவனின் மற்றொரு கரம் சற்றே கீழிறங்கி, புடவையின் இடையே பளீரென்று தெரிந்த வெண்ணிற மெல்லிடையைப் பற்றியது. அந்தச் செயலில் தேகம் சூடாக, தன்னிலை இழந்தவளாக, விழிகளை விரித்தாள் அஞ்சலி.
அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டபடி, அவளுடன் கலக்க விரும்பியவனாக, அவளை இன்னும் நெருங்க முயற்சித்தவனின் நெருக்கத்தில், மொத்தமாகத் தடுமாறிப் போனவளின் விழிகள், தானாக மூடிக்கொண்டது.
அதிர்ந்த தேகத்தின் அசைவுகளை மொத்தமாய் உணர்ந்தவனாக, அஸ்வின் தன்னவளின் முகம் பார்த்தான். அவள் கட்டியிருந்த புடவைக்குச் சற்றும் சளைக்காது செக்கச் சிவந்திருந்தது அவள் முகம்.
சிறை பிடித்திருந்த கரங்களை விடுவித்தவனின் இடது கரத்தின் ஆள்காட்டி விரல் அவள் முகத்தில் கோலம் வரைய, முற்றும் தளர்ந்து போனாள் அஞ்சலி.
தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அவன் தோள்களையே அவள் விரல்கள் இறுக பற்ற, நெற்றியில் தொடங்கிய அவன் விரலின் பயணம் புருவங்கள், விழிகள், நாசி, கன்னம் என அனைத்திலும் ஊர்ந்து இதழ்களில் தேங்கியது. இதழ்களோ துடித்து அழைத்தது அதன் இணையை!
அவள் நிலையில் அவன் நிலையும் மோசமாகிப் போக, மீண்டும் அவள் இடை பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்தவனின் மற்றொரு கரம், அவள் கற்றைக் குழலின் ஊடாகச் சென்று இறுக்கமாய் பற்றிட, அந்நொடி, திறந்த அவளின் விழிகளைப் பார்த்துக்கொண்டே, சட்டென்று குனிந்து அவள் இதழில் தன் இதழ் பதித்தான் அஸ்வின்.
முதல் முத்தம்! அதுவும் இதழ் முத்தம்!
பெண்ணவளுக்குச் சித்தமும் கலங்கிப் போனது. உலகம் மறந்து அவளுக்குள் நிறைந்துவிட எண்ணியவனாய், அவன் இதழ் முத்தம் நீண்டு கொண்டே போனது. மூச்சுக்கு முடியாமல் அவள் தவித்த நொடியில் தான், கொஞ்சமாய் ஸ்மரணை வரப் பெற்றவன், அப்பொழுதும் அவள் இதழ்களில் இருந்து வெளிவர முடியாதவனாக, மீண்டும் ஒருமுறை அழுந்த முத்தமிட்டு அவளை விடுவித்தான்.
முழுதாய் ஒரு நிமிடம் ஆனது, இருவரும் தன்னிலைக்கு வருவதற்கு. வந்த பின்பு, அதிர்ந்து நிமிர்ந்து, ஆழியாய் தன் விழிகளை விரித்து அஞ்சலி அவனைப் பார்க்க, அஸ்வினோ மென்புன்னகையோடு, “அப்படிப் பாக்காதடி..” என்றான், பிடரியைக் கோதி தன்னைச் சரிசெய்தபடி.
அவனது வெட்கம் அவளை மெய் சிலிர்க்கச் செய்து, இன்னும் தெளியச் செய்ய, அவள் முகத்திலும் மென் நகை வந்து ஒட்டிக் கொண்டது.
விடாமல் அவன் முகத்தையே அவள் பார்த்துக்கொண்டு இருக்க, “என்ன?” என்று கேட்டான், மென்சிரிப்போடு.
நாணத்தில் தன் கீழ் உதட்டை அவள் லேசாகக் கடிக்க, அவளிடம் மொத்தமாக மயங்கிப் போனான் அஸ்வின்.
அவளோடு பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்க, தன்னைத் தடுமாறச் செய்யும் அவளிலிருந்து மிகக் கடினப்பட்டுத் தன் பார்வையை விலக்கியவன், அவள் அறையைச் சுற்றிப் பார்த்தான். ஒரு பக்க சுவரில் இருந்த அவளது பல்வேறு காலகட்ட புகைப்படங்களில் நிலைத்தது அவன் விழிகள்.
அதன் அருகில் அவன் செல்ல, ஓரளவுக்குத் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட அஞ்சலி, “எப்படி?” என்று கேட்டாள்.
“என்ன எப்படி?” என்று அவளைத் திரும்பிப் பார்க்காது, அவளின் குழந்தைப் பருவ புகைப்படத்தை வருடியபடி கேட்டான் அஸ்வின்.
“எப்படி இந்த மாற்றமெல்லாம்?” என்றவளின் குரலில், அவளை லேசாகத் திரும்பிப் பார்த்தவன், “தெரியலை..” என்றான்.
ASIN ‏ : ‎ B0FGYG5STM
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 508 KB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 466 pages
Best Sellers Rank: #47 in Kindle Store (See Top 100 in Kindle Store) #3 in Enemies to Lovers Romance eBooks #4 in Romantic Comedy eBooks #8 in Romantic Comedy (Books)
Customer Reviews: 4.6 4.6 out of 5 stars 117 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });